Search

sasi

Dec 24, 2025

உள்ளூர்

மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு நிவாரண பொதி வழங்குவதில் தாமதம்

மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக தொழிலை இழந்த மீனவர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அனுப்பி வைக்கப்பட்டுள்ள உலர் உணவு பொதிகளை மீனவர்களுக்கு வழங்குவதில் உரிய அதிகாரிகளுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளது? என இன்று வியாழன்(24) மதியம் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் பொது வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்திற்கு கடந்த 13ஆம் திகதி விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்ந்தார்.

இதன்போது, சுமார் 12,000 மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நவம்பர் 27 முதல் பல வாரங்களாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலையும் எடுத்துக்கூறப்பட்டது.

உடனடியாக பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தபோதிலும் இதுவரை 2000 மீனவர்களுக்கான நிவாரண பொதிகளே கிடைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All