Search

sasi

Dec 27, 2025

உள்ளூர்

போஞ்சி உள்ளிட்ட சில காய்கறி வகைகளின் விலைகள் உயர்வு.

புறக்கோட்டை, தம்புள்ளை மற்றும் நாராஹேன்பிட்டிய பொருளாதார மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில், போஞ்சி உள்ளிட்ட சில காய்கறி வகைகளின் விலைகள் நேற்று (26) மேலும் உயர்வாக இருந்தன.

சில இடங்களில் ஒரு கிலோ போஞ்சி ரூபாய் 1,400க்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கியின் தினசரி விலை அறிக்கையின்படி, தக்காளி விலை ரூபாய் 500ஐ கடந்துள்ளதாகவும் மற்றும் பச்சை மிளகாய் விலை ரூபாய் 1,500ஐ கடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All