
admin
Apr 25, 2026
உலகம்
ஹொலிவுட்டில் இன்று இலங்கையின் இயற்கை அழகு

இலங்கையின் இயற்கை அழகை உலகிற்கு கொண்டு செல்லும் 'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி இன்று அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி ஹொலிவுட்டில் உள்ள 'Celebrity Centre International' இல் இன்று முற்பகல் 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
அமெரிக்க - இலங்கை புகைப்படக் கலைச் சங்கம் மற்றும் லொஸ் ஏஞ்சலஸில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன. உலக பூமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “பூமியைப் பாதுகாப்போம்” ஓவியக் கண்காட்சியும் இதற்கு இணையாக நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கான ஊடக அனுசரணையினை 'அத தெரண' செய்தி நிறுவனம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





