Search

sath

Jan 10, 2026

உலகம்

வெனிசுலாவின் மற்றொரு எண்ணெய் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா

வெனிசுலாவுடன் தொடர்புடைய சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கரீபியன் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த “ஒலினா” என்ற மற்றொரு எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, கடற்படை மற்றும் தெற்கு பிராந்திய பாதுகாப்புப் படைகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் எந்தவித எதிர்ப்பும் இன்றி கப்பல் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கப்பல் வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் எடுத்துச் சென்றதாகவும், சர்வதேச பொருளாதார தடைகளை மீறி செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட வர்த்தகங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு “எந்தவித பாதுகாப்பும் கிடையாது” என அமெரிக்க தெற்கு பிராந்திய பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

வெனிசுலாவுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல்களை தொடர்ந்து கண்காணித்து பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All