Search

sath

Dec 25, 2025

உள்ளூர்

கிரேன்ட்பாஸ், பிலியந்தலையில் துப்பாக்கிகள் மீட்பு

கிரேன்ட்பாஸ் மற்றும் பிலியந்தலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இரு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிரேன்ட்பாஸ், ஹெடேவத்த பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் அதற்கான 27 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தைச் சுற்றியுள்ள CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த இடத்திற்கு துப்பாக்கியை கொண்டு வந்த நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், பிலியந்தலை பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலுக்கு இணங்கவே இந்தத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

எனினும், இதனை அங்கு கொண்டு வந்த நபர் யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளிப்படவில்லை, மேலும் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All