Search

Dec 21, 2025

உள்ளூர்

மன்னாரில் மக்கும் பேக்கில் கொத்து! அதிரடி சோதனையில் உணவகம் சீல்

மன்னார் மூர்வீதியில் அமைந்திருந்த உணவகம் ஒன்றில் கொத்து தயாரிக்க பயன்படும் மூலப் பொருளான ரொட்டியை  தரமற்ற மக்கும் தன்மை கொண்ட   பேக்கில் (bag) சுருட்டி கொத்து தயாரிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் சுகாதாரத்துறையினரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் தொடர்பாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு தொடர்ச்சியாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை தொடர்ந்து நேற்றைய தினம் (20) மன்னார் மூர்வீதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அதே நேரம் குறித்த உணவகம் அனுமதியின்றி இயங்கி வந்ததுடன் உணவகத்தில் பணிபுரியும் நபர்கள் சுகாதார அனுமதி கூட பெறாமை கண்டறியப்பட்டது.

அத்துடன் குறித்த உணவகத்தில் அசுத்தமான முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டமை,அசுத்தமான  முறையில் உணவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை,கழிவு நீர் ஒழுங்காக வெளியேற்றப்படாமை,உணவு தயாரிப்பவர்கள் கையுறை,தலையுறை பயன்படுத்தாமை போன்ற பல்வேறு சுகாதார குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த உணவகத்துக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

அதே நேரம் நேற்றைய தினம் (20) எழுத்தூர் பகுதியில் அமைந்திருந்த ஒரு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள் காணப்பட்டமை, பொருட்கள் ஒழுங்கான முறையில் சுத்தம் செய்யப்பட்டிருக்காமை,எண்ணை

வகைகள் ஒழுங்கான முறையில் களஞ்சியப்படுத்தப்படாமை கண்டறியப்பட நிலையில் குறித்த வியாபார நிலையத்திற்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All