Search

sath

Dec 28, 2025

உள்ளூர்

பதுளை: தன்னார்வ சேவையில் ஆயிரக்கணக்கான இளைஞர்,யுவதிகள்

“One Million Volunteers” திட்டத்தின் கீழ் பேரழிவால் பாதிக்கப்பட்ட பதுளையில் சேவை செய்ய ஆயிரம் இளைஞர்கள் இணைந்துள்ளனர்.

பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்திற்கு தன்னார்வ சேவைகளை வழங்கும் நோக்குடன் மேற்படி திட்டத்தின் கீழ், ஆயிரம் இளைஞர்,யுவதிகள் கொண்ட குழு ஒன்று நேற்று இணைந்துள்ளது.

இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர தலைமையில் பண்டாரவெல இளைஞர் படையின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இலங்கை முழுவதும் பல்வேறு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய இளைஞர்கள் கூடி, நேற்றும் இன்றும் பதுளை மாவட்டத்தின் பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதன்போது தோட்ட மற்றும் சமூகஉட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, இளைஞர் அலுவல்கள் பிரதி அமைச்சர் தினிது சமன் ஹென்னாயக்க, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, பதுளை மாவட்ட இளைஞர் சேவை மன்ற அதிகாரிகள், மேலும், நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All