Search

Aug 24, 2025

உள்ளூர்

அனைத்துப் பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ள திட்டம்

அனைத்துப் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு தினசரி உடல் தகுதித் திட்டங்களை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பில் இந்த முடிவு குறித்து கலந்துரையாடப்பட்டதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு அமைச்சுக்கும், கல்வி அமைச்சுக்கும் இடையில் கூட்டுக் குழுவை நிறுவுவதற்கும் கூட்டத்தில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டதாக பிரதி அமைச்சர் செனவிரத்ன மேலும் தெரிவித்தார்.

பாடசாலை விளையாட்டு சங்கங்கள் மற்றும் தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு இடையே இந்தக் குழு ஒருங்கிணைந்து செயல்படும், பயிற்சியாளர்களுக்கான வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுகளில் தொடர்ச்சியை உறுதி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All