Search

admin

Feb 9, 2026

உலகம்

ஜப்பான் பொதுத்தேர்தலில் Sanae Takaichi வெற்றி

நேற்று நடைபெற்ற ஜப்பான் பொது தேர்தலில் சனே டக்காச்சி வெற்றி பெற்றுள்ளார். ஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த அக்டோபரில் பதவி ஏற்றார். இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளது. 

பாராளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி செயல்படுத்தவும், தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அவர் தேர்தல் நடத்தும் முடிவை எடுத்தார். 

வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. புதிய அரசு அமைந்த பிறகு உடனடியாக வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும் என பிரதமர் சனே டக்காச்சி உறுதியளித்தார். 


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All