Search

Rebecca

Jan 6, 2026

உள்ளூர்

மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.

ஊவா மாகாணம் மற்றும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அத்துடன் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்…

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All