Search

Rebecca

Jan 6, 2026

உள்ளூர்

புலதிசி மற்றும் எல்ல ஒடிசி மீள சேவையில்

புலதிசி நகர் சேர் ரயில் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையிலும் ஒவ்வொரு ஞாயிறுக்கிழமைகளிலும் மட்டக்களப்பு முதல் கொழும்பு கோட்டை வரையிலும் பயணத்தில் ஈடுபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் கேள்விக்கமைய ரயில் பயண தடவைகளை எதிர்காலத்தில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எல்ல ஒடிசி சுற்றுலா ரயில் நாளை முதல் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் அம்பேவளை முதல் பதுளை வரை பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிலவிய அனர்த்தங்களினால் குறித்த ரயில் மார்க்கத்தின் பயண சேவைகள் இதுவரைக் காலம் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All