
Rebecca
Jan 30, 2026
உள்ளூர்
திருகோணமலை பாரதி தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

திருகோணமலை வலயக் கல்வி அலுவலக எல்லைக்குட்பட்ட பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆரம்பக் கல்வி ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் குறித்த பாடசாலை மாணவர்களது பெற்றோர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பாடசாலையில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வரும் குறித்த ஆசிரியரது முயற்சியால் தமது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றதாகவும் அவ்வாறானதொரு ஆசிரியரை இடமாற்றம் செய்வது அப்பகுதி மாணவர்களது கல்வி எதிர்காலத்தினை பாதிக்கும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக சம்பத்தப்பட்ட தரப்பிடம் தெரிவிக்கப்பட்ட போதிலும் தமக்கு சாதகமான முடிவு எட்டப்படவில்லை எனவும், பிறிதொரு நியமனத்தின் ஊடாக ஆசிரியர் தமது பாடசாலைக்கு நியமிக்கப்பட கால தாமதம் ஏற்படுவதனால் மாணவர்களது கல்வியானது கேள்விக்குறியாக மாறிவிடும் எனவும் தெரிவித்தனர்
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






