Nivin
Aug 25, 2025
ஆரோக்கியம்
டயாலிசிஸ் சிகிச்சை இனி தேவை இல்லையா?
நவீன மருத்துவ உலகில் இன்று அதிகளவில் பயன்படுத்தப்படும் சொற்களில் டயாலிசிஸ் ஒன்று பெரும்பாலும் சிறுநீரக பாதிப்பு நிகழ்ந்திருந்தால்தான் இந்த டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும்.ஆனால் தற்போது இந்த சிகிச்சை குழந்தைகளுக்கும் அளிக்கப்படுகின்றதென்பது மிக கவலைக்குரிய விடயமாகும்.

சிறுநீரகம் ரத்தத்தில் உள்ள யூரியா போன்ற நச்சுக்களை,மேலதிக உப்பு மற்றும் நச்சுக்களை வடிகட்டி சிறுநீரக வெளியேற்ற உதவுகின்றன. இவை பாதிப்படையும் போதுதான் டயாலிசிஸ் செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. சிறுநீரகத்துக்கு முதல் இரண்டு எதிரிகள் நீரிழிவு,ரத்தக்கொதிப்பு ஆகிய இரண்டு நோய்களும் தான் இவைகளை அளவுகளுக்குள் வைக்காவிட்டால் உங்கள் கிட்னிகள் பாதிப்படைய வாய்ப்புகள் மிக அதிகம்.

சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி? என்ற கேள்விக்கு இதோ பதில் சிறுநீர் மலத்தை ஒருநாளும் அடக்க கூடாது,நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 லீட்டர் நீர் அருந்துவது அவசியமான ஒன்று புகை மற்றும் மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.அயோடின் உப்பை தவிர்த்து வேறு உப்பு பயன்படுத்தலாம் வலிநிவாரணி மாத்திரைகளை தவிர்க்கவேண்டும்,தினசரி 7 மணி நேரமாவது உறங்க வேண்டும்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All