Search

admin

May 22, 2026

உள்ளூர்

நிந்தவூரில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்த ஜனாதிபதி.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க   அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளதுடன் முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார்.

இன்று  காலை  நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்திற்கு அருகில் அமையவுள்ள நிந்தவூர் கலாசார மையத்திற்கான  அபிவிருத்தி வேலைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அத்துடன் அங்கிருந்து மற்றுமொரு  நிகழ்விற்கு செல்ல முன்னர் குறித்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த மக்களுடன் அன்பினை பகிர்ந்து கொண்டார்.

எனினும் இந்நிகழ்விற்கு தனியார் ஊடகங்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் அரச ஊடகங்களுக்கு அங்கு நடைபெற்ற சகல நிகழ்விற்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் தகவல்  திணைக்களம் ஊடாக குறித்த நிகழ்விற்கு வழங்கப்பட்ட பெயர் பட்டியலில் இருந்த தனியார் ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்விற்கு அழைத்து பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அழைத்து செல்லப்பட்ட போதும் ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு பொறுப்பான நபரினாலும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினராலும்  செய்தி சேகரிப்பது முற்றாக தடுக்கப்பட்டிருந்தது.

இது தவிர ஊடகங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்திலும் கூட எந்தவொரு வசதியும் அங்கு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.கடந்த கால அரசாங்கத்திலும் இவ்வாறு தான் ஊடகங்களுக்கு மேற்கொள்ளப்பட் அநீதிகளை சுட்டிக்காட்டி இன்று வந்த அரசாங்கமானது ஊடகங்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிப்பதை தடுத்தமை கவலைக்குரியதாகும்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All