Search

Rebecca

Jan 17, 2026

உலகம்

கிரீன்லாந்து திட்டத்தை எதிர்த்தால் வரி விதிக்கப்படும்

அமெரிக்காவுடன் கீரின்லாந்தை இணைக்கும் திட்டத்தை எதிர்க்கும் நாடுகள் மீது புதிய வரிகள் விதிக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும் புதிய விதிகளை அனுபவிக்க நேரிடும் நாடுகள் குறித்து அவர் பட்டியலிடவில்லை.

கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கான டிரம்பின் தீர்மானத்திற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியமானது என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

கிரீன்லாந்து சனத்தொகை செறிவற்ற ஆனால் வளங்கள் நிறைந்த ஒரு பூமியாகும். வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள கிரீன்லாந்து, ஏவுகணைத் தாக்குதல்களின் போது அமெரிக்காவிற்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் கட்டமைப்புகளுக்கும், பிராந்தியத்தில் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் பொருத்தமான இடமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All