
janani
Jun 4, 2026
உள்ளூர்
அடுத்த பாராளுமன்ற அமர்வு!

ஜூன் மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நான்கு நாட்களும் கேள்வி நேரம் மற்றும் பாராளுமன்ற அலுவல்களுக்காக காலை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பல முக்கிய சட்டமூலங்கள் மற்றும் தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
ஜூன் 9ஆம் திகதி முத்திரைத் தீர்வை, பெறுமதி சேர் வரி உள்ளிட்ட பல நிதி சார்ந்த கட்டளைகள் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் தொடர்பான தீர்மானமும் விவாதிக்கப்பட உள்ளது.
ஜூன் 10ஆம் திகதி தொலைத்தொடர்பு அறவீடு திருத்தச் சட்டமூலம், நிதி திருத்தச் சட்டமூலம் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் தொடர்பான தீர்மானங்கள் விவாதிக்கப்படவுள்ளன.
ஜூன் 11ஆம் திகதி மத்தியஸ்தம் மற்றும் குற்றவியல் ஒத்துழைப்பு தொடர்பான சட்ட விவகாரங்கள் எடுத்துக்கொள்ளப்படுவதுடன், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதத்திற்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜூன் 12ஆம் திகதி இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடுகள் குறித்து விவாதம் நடைபெறவுள்ளது. மேலும், மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை தொடர்பான விவாதமும் தொடரவுள்ளது.
அத்துடன், தற்போதைய நாணயக் கொள்கை மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விசேட நிகழ்ச்சியொன்றும் ஜூன் 10ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






