Search

Rebecca

Jan 5, 2026

உலகம்

நிவ்யோர்க் நீதிமன்றில் ஆஜராகும் மதுரோ

அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் சிறைப்பிடிக்கப்பட்டு நிவ்யோர்க் அழைத்து வரப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ருபியோ தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவுடன் போரை ஆரம்பிக்கும் நோக்கம் அமெரிக்காவிற்கு இல்லை. சிறந்த நிர்வாகம் ஏற்படும் வரை வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெனிசுலா ஜனாதிபதி உட்பட அவரது பாரியார் சிறைபிடிக்கப்பட்டு நிவ்யோர்க்கிற்கு அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து வெனிசுலாவின் உப ஜனாதிபதி அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இதேவேளை வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மதுரோவின் பாதுகாப்பு அதிகாரிகளில் பலர் உயிரிழந்துள்ளதுடன், அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All