Search

Rebecca

Sep 5, 2025

உள்ளூர்

மரியா திரிபோடியுடன் விஜத ஹேரத் சந்திப்பு

இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜத ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு நேற்று அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, இடம்பெயர்வு மற்றும் விமான இணைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பரஸ்பர நன்மை தரும் துறைகளில் பொருளாதார மற்றும் இராஜதந்திர ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இருகட்சிகளும் வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All