Search

janani

Apr 1, 2026

உலகம்

அதிகரித்தது மசகு எண்ணெய் விலை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்கள் காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று மீண்டும் கணிசமான அதிகரிப்பை சந்தித்துள்ளது.


மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற சூழல் விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தினால், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் ஏறுமுகத்தில் உள்ளன.உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 103.1 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.


அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.8 அமெரிக்க டொலராக நிலவுகிறது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All