Search

SEGU

Apr 15, 2026

உலகம்

லெபனான் - இஸ்ரேல் முதற்கட்ட நேரடிப் பேச்சுவார்த்தை நிறைவு

நான்கு தசாப்தங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே வொஷிங்டனில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முதற்கட்ட நேரடிப் பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக லெபனான் அரசு ஊடகமான தேசிய செய்தி முகமை தெரிவித்துள்ளது.

கடந்த 1983-ஆம் ஆண்டிற்குப் பிறகுஇரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் முதல் நேரடி இராஜதந்திரப் பேச்சுவார்த்தை இதுவாகும்.

அமெரிக்காவின் வொஷிங்டனில்; உள்ள வெளியுறவுத் துறை தலைமையகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தலைமையிலான இந்தச் சந்திப்பில் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்:

தற்போது நிலவி வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதே இந்த சந்திப்பின் முதன்மை நோக்கமாகும்.

இதன்போது, உடனடிப் போர்நிறுத்தம் மற்றும் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவதை லெபனான் வலியுறுத்தியுள்ளது.

எல்லையில் நீண்ட காலப் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் ஆயுதக் குழுக்களின் ஆதிக்கம் இல்லாத நிலையை உருவாக்குவது குறித்து இஸ்ரேல் கவனம் செலுத்தியுள்ளது.

இது ஒரு ஆரம்பகட்ட அமர்வு மட்டுமே என்றும், அனைத்து சிக்கல்களையும் ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது என்றும் அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், தற்போதைய பதற்றமான சூழலில் இந்த நேரடி உரையாடல் ஒரு முக்கியமான தொடக்கமாகக் கருதப்படுகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All