Search

Rebecca

Feb 21, 2026

உலகம்

பிலிப்பின்ஸில் மண்சரிவு – 7 பேர் உயிரிழப்பு

தென்கிழக்கு பிலிப்பின்ஸில் பெய்து வரும் தொடர் மழையினால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள மாட்டி நகரில் நேற்று (20) அதிகாலை மண்சரிவு ஏற்பட்டதில், பெரிய பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில் அங்கிருந்த ஒரு வீடு முழுமையாக புதைந்தது. அந்த வீட்டில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனர்.

இதேபோல், டாவோ டீ ஓரோ மாகாணத்தில் உள்ள மொன்காயோ நகரிலும் மண்சரிவால் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All