Search

sath

Jan 11, 2026

உலகம்

வெனிசுலா அதிபரைப் போல புதினை கடத்த திட்டமா?

உக்ரைன்–ரஷியா போர் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். ஆனால், டிரம்ப் நிர்வாகம் முன்வைக்கும் அமைதி ஒப்பந்தங்களை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பல காரணங்களை கூறி நிராகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அண்மையில் அமெரிக்கா வெனிசுலா நாட்டிற்குள் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை மனைவியுடன் கைது செய்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்ற சம்பவம் உலகளவில் பெரும் கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து, “வெனிசுலா அதிபரைப் போல புதினையும் கடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதா?” என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு பதிலளித்த டிரம்ப்,
“ரஷியாவுக்குள் புகுந்து புதினை கைது செய்து நாடு கடத்தும் எந்தவொரு திட்டமும் இல்லை” என தெளிவுபடுத்தினார். மேலும், ரஷியாவுடன் அமெரிக்காவுக்கு நல்லுறவு உள்ளதாகவும், எனினும் உக்ரைன்–ரஷியா போரை நிறுத்த முடியாததில் தனக்கு ஏமாற்றம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகின் பல போர்களை நிறுத்துவதில் வெற்றி பெற்றதாக கூறிய டிரம்ப்,
“உக்ரைன்–ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர முடியாதது வருத்தமளிக்கிறது” என்றும் கூறினார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All