
Rebecca
Feb 19, 2026
உள்ளூர்
தமிழர் அரசியல் தீர்வு தொடர்பில் மீண்டும் சர்வதேச கவனத்தில்..!

பிரிட்டிஷ் துணை பிரதமரின் சமீபத்திய இலங்கை விஜயம், தமிழர் அரசியல் பிரச்சினை மீண்டும் சர்வதேச அளவில் அழுத்தத்துடன் பேசப்படும் நிலையை உருவாக்கியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கைத் தமிழ் அரசுத் தலைமையினருடனும், தமிழ்த் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களுடனும் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இந்த சந்திப்பில் தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்திய முக்கிய அம்சம், தமிழர் இனப் பிரச்சினைக்கு நிலையான மற்றும் அரசியல் அடிப்படையிலான தீர்வு எமது மக்களுக்கு உடனடித் தேவை என்பதாகும். கடந்த பல தசாப்தங்களாக நீடித்து வரும் அரசியல் மற்றும் நிர்வாக சிக்கல்கள், தற்காலிக நடவடிக்கைகள் மூலம் தீர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டோம். அதற்காக அதிகாரப் பகிர்வு, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் அரசியல் அமைப்பு மாற்றங்கள் போன்றவை அவசியம் எனவும் தெரிவித்தோம்.
மேலும், தமிழர் பிரச்சினை தொடர்ந்து தாமதப்படுத்தப்படுவது சமூகத்தில் விரக்தி நிலையை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது. குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை குறைவு உருவாகும் முன், அரசியல் தீர்வை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திதினோம்.

இந்த சந்திப்பு, இலங்கையின் இனச்சமரச முயற்சிகள் இன்னும் நிறைவேறாத நிலையிலுள்ளதாக சர்வதேச சமூகத்திற்கு நினைவூட்டும் ஒரு நிகழ்வாக அமைந்தது. அதேவேளை, தமிழர் அரசியல் உரிமைகள் தொடர்பான விவாதம் இன்னும் முடிவுக்கு வராத ஒன்றாக இருப்பதையும் இவ் சந்திப்பானது வெளிப்படுத்துகிறது.
எனவே, இந்த விஜயம் ஒரு சாதாரண அரசியல் மரியாதைச் சந்திப்பாக இல்லாமல், தமிழர் அரசியல் எதிர்காலத்தைப் பற்றி சர்வதேச மட்டத்தில் கவனம் திருப்பிய ஒரு முக்கியமான தூதரக நிகழ்வாக இருந்தது.
இந்த சந்திப்பில் நானும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் M A சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






