
janani
Apr 28, 2026
உள்ளூர்
தமிழகத்தில் இலங்கை மீனவர் தாக்கப்பட்ட சம்பவம் : எதிர்ப்பு தெரிவித்த நாமல் ராஜபக்ச

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களால் நமது கடற்றொழிலாளர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட காட்சிகள் மிகுந்த கவலையளிப்பதாகவும் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழக கடற்றொழிலாளர்களால் இலங்கை கடற்றொழிலாளர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அவர், இச்சம்பவம் தொடர்பில் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், அவரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கும் இலங்கை அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





