Search

janani

Mar 23, 2026

உள்ளூர்

அடையாள அட்டைகள் வழமை போல் விநியோகிக்கப்படும் : திணைக்களம் அறிவிப்பு

தேசிய அடையாள அட்டை விநியோக நடவடிக்கைகள், நாளை முதல் வழமை போல் முன்னெடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இன்று ஏற்பட்ட இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காக திணைக்களத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறித்த தொழில்நுட்பக் கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதால், நாளை முதல் சேவைகளைத் தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும் எனத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All