
admin
Apr 16, 2026
உலகம்
ஹோர்முஸ் விவகாரம்: சீனா–ஈரான் பேச்சு

ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பாக சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று (15) தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர்.
“ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது ஒரு சர்வதேச கோரிக்கை ஆகும். மேலும், ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால் ஹோர்முஸ் வழியாக மேற்கொள்ளப்படும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
“நீரிணையின் இயல்பான போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதுதான் சர்வதேச அமைப்புகளின் ஒருமித்த அழைப்பாக இருக்கிறது. தற்போதைய நிலைமை போருக்கும் அமைதிக்கும் இடையிலான ஒரு நெருக்கடியான காலகட்டத்தை எட்டியுள்ளது. இதனால், அமைதிக்கான வாய்ப்பு உருவாகி வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





