
janani
Apr 3, 2026
உலகம்
மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக பாகிஸ்தானில் மீண்டும் எரிபொருள் விலை அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதட்டங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், பாகிஸ்தான் அரசாங்கம் தனது நாட்டில் எரிபொருள் விலைகளை பாரியளவில் அதிகரித்துள்ளது. ஒரே மாத காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது விலையேற்றம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பர்வைஸ் மாலிக், அமெரிக்க - ஈரான் மோதலால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாகவும், இதனால் விலையேற்றம் தவிப்புக்க முடியாத ஒன்றாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நெருக்கடிக்கு முன்னர் 260 ரூபா அளவில் காணப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள், தற்போது முறையே 76% மற்றும் 96% என்ற பாரிய வளர்ச்சியை எட்டியுள்ளன. இந்த விலையேற்றம் காரணமாக போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, அந்நாட்டின் பணவீக்கம் மேலும் மோசமடையும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





