
admin
Jul 14, 2026
உலகம்
நான்கு ஆண்டுகள் நீடித்த போர்நிறுத்தம் முறிந்தது – மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து பெலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யேமனின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கைாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனுடன், சவுதி அரேபியாவிற்கும் ஈரானிய ஆதரவு பெற்ற இந்த ஆயுதக் குழுவிற்கும் இடையில் நான்கு வருடங்களாக நிலவி வந்த போர்நிறுத்த உடன்பாடு முறிவடைந்துள்ளது.
அபா (Abha) என்பது யேமன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மலைப்பாங்கான தெற்கு பிராந்தியத்தின் தலைநகரமாகும், மேலும் பல சவுதி குடிமக்கள் அங்கு சுற்றுலா மேற்கொள்கின்றனர்.
கடந்த 2022 மார்ச் மாதத்தில் சவுதியின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களின் பின்னர் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுக்கு பிறகு சவுதி அரேபியாவுக்கு எதிராக நடத்தப்பட்டதாக ஹூதி அமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்ட முதலாவது தாக்குதல் இதுவாகும்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






