Search

admin

Jul 11, 2026

உள்ளூர்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளிநாட்டு வருவாய் கணிசமாக அதிகரிப்பு!

வௌிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல்கள் மூலம் இலங்கை கடந்த ஜூன் மாதத்தில் 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாகப் பெற்றுள்ளது. 

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

கடந்த மே மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு வருவாய் 847 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. 

இதன்படி, மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் வெளிநாட்டு பணவணுப்பல்கள் மூலம் பெறப்பட்ட வருவாயானது 152 மில்லியன் அமெரிக்க டொலர்களினால் கணிசமாகக் குறைந்துள்ளது. 

இதேவேளை, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் வௌிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு வருவாய் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 23.2 சதவீத அதிகரிப்பைக் காட்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகிறது. 

அதேநேரம், 2026 ஜூன் மாதத்தில் இலங்கை சுற்றுலாத்துறை மூலம் 151.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 

இருப்பினும், மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஜூன் மாதத்திற்கான சுற்றுலா வருவாய் 169.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All