
janani
Apr 23, 2026
உலகம்
வரிசையில் காத்திருந்து வாக்களித்த திரையுலக ஜாம்பவான்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,திரையுலகின் நடிகர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
இதேவேளை, நடிகர் ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அவருடன் அவரது மகளும் இயக்குநருமான சௌந்தர்யாவும் வந்து வாக்கினைப் பதிவு செய்தனர்.
வாக்களித்துவிட்டு வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
"வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாகத் தங்களது வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்" என்று அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகம் முழுவதும் இன்று காலை முதலே பல பிரபலங்களும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





