
Rebecca
Feb 2, 2026
உள்ளூர்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

தங்களுடைய பணியில் நிரந்தர நியமனம் கோரி இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இதில் பல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஏற்கனவே ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பு இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்றைய தினம் இலங்கை பூராகவும் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்பு ஒன்றுதிரண்டுள்ளனர்.
அவர்கள் கடந்த 7 வருடங்களாக ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கான நிரந்தர நியமனங்களை அரசாங்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தாங்கள் ஒருபோதும் அரசை கவிழ்க்கவோ, அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளவோ ஒன்று திரளவில்லை என்றும் தங்களினுடைய நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியமனங்களை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






