
admin
Jul 4, 2026
உள்ளூர்
ஈழத்தமிழர் அரசியல் தீர்வு, மனித உரிமைகள் குறித்து முதலமைச்சருடன் விரிவான பேச்சுவார்த்தை!

இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினராகிய நாம் இன்று சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளோம். எழுத்துமூலமாக கோரிக்கை கடிதமம் கையளித்துள்ளோம். அக்கடிதத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில், ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம், இந்திய–ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
குறித்த சந்திப்பில், ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், தமிழ்த் தேசியப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏழு பேர் கொண்ட பிரதிநிதிக் குழு கலந்துகொண்டது.
அக்குழுவில் இடம்பெற்றவர்கள்:
முதலமைச்சருடனான சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த சமூக நீதித்துறை அமைச்சராகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கும் திரு.வன்னியரசு அவர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் இச்சந்திப்பிற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – தலைவர், தமிழ்த் தேசியப் பேரவை; நாடாளுமன்ற உறுப்பினர்.
செல்வராசா கஜேந்திரன் – பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
பொன்னுத்துரை ஐங்கரநேசன் – தலைவர், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்
கே. வி. தவராசா – தலைவர், ஜனநாயகத் தமிழர் கட்சி; ஜனாதிபதி சட்டத்தரணி
தருமலிங்கம் சுரேஷ் – தேசிய அமைப்பாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
கனகரட்ணம் சுகாஷ் – உத்தியோகபூர்வ பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியும்,
நடராஜர் காண்டீபன் – கொள்கைப் பரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியும்,
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






