
janani
Mar 16, 2026
உள்ளூர்
எரிபொருள் வரியை குறைக்க கோரிக்கை

எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து, எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய சர்வதேச சூழல் இலங்கைக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே அனைத்து வகை எரிபொருட்களின் விலையும் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகச் சந்தையில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அரசாங்கம் தலையிட்டு வரிகளைக் குறைக்க வேண்டும்.
இந்த விலையேற்றத்தின் முழுச் சுமையையும் தொழிலதிபர்கள் மற்றும் நுகர்வோர் மீது சுமத்தாமல், அரசாங்கம் வரிச் சலுகை மூலம் விலையைத் தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





