Search

Rebecca

Dec 7, 2025

உள்ளூர்

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி

தெஹிவளை “A க்வாடஸ்” விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

உயிரிழந்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

2 பாதாள குழுக்களுக்கு இடையே காணப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All