
janani
May 6, 2026
உள்ளூர்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று இரண்டாவது நாளாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானுடனான போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி உடன்படிக்கையை எட்ட முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து, இவ்வாறு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து மீண்டும் தடையின்றி எண்ணெய் விநியோகம் ஆரம்பமாகும் என்ற எதிர்பார்ப்பு இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இதன்படி, பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 1.52 டொலர் (1.38%) வீழ்ச்சியடைந்து 108.35 டொலராகப் பதிவாகியுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





