Search

Rebecca

Jan 27, 2026

உள்ளூர்

நுவரெலியாவில் புதிய பூங்கா நிர்மாணம்

நுவரெலியா கிரெகரி ஏரிக்கு இணைவாக காணப்படும் காணியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தீம் பார்க் ஒன்றை அமைப்பதற்கு முதலீட்டு யோசனைகளை பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையிடமுள்ள 10 ஏக்கரிற்கும் அதிக காணியில் இந்த பூங்கா நிர்மாணிக்கப்படும்.

நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் காணப்படும் பயன்பாட்டிற்கு எடுக்காத காணிகள் தொடர்பில் பொருத்தமான அபிவிருத்தி செயற்பாடுகளை பரிந்துரைக்கும் வகையில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவினால் இதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All