Search

Sep 9, 2025

உள்ளூர்

பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் : அருட்தந்தை ஜீவந்த பீரிஸ்

ஜனாதிபதி காற்றாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது விட்டால் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்தார்.

மன்னாரில் காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று 38ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர்,

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம் 38ஆவது நாளாக தொடர்கின்றது. இந்நிலையில் மக்களின் போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.

ஜனாதிபதி காற்றாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் போராட்டத்திற்கு நீதி கிடைக்காது விட்டால் எதிர்வரும் 19ஆம் திகதி மாலை 2 மணிக்கு ஜனாதிபதி செயலகம் முன் போராட்டத்தை நடத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All