Rebecca
Sep 3, 2025
தொழில்நுட்பம்
விமானங்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கான பின்னணி…
பொதுவாகவே பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதை தான் நாம் அதிகமாக பார்த்திருப்போம். ஆனால், அதற்கு பின்னாலும் காரணம் இருக்கிறது.
அது அதனுடைய தோற்றத்திற்காக மட்டும் அல்ல, பணத்தை மிச்சப்படுத்தவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், விமானங்களை மிகவும் திறமையாக பறக்க வைக்கவும் விமான நிறுவனங்கள் வெள்ளை நிறத்தைத் தேர்வு செய்கின்றன.
வெள்ளை நிறமானது சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் விமானங்கள் வெயிலில் இருக்கும் போதோ அல்லது மேகங்களுக்கு மேலே உயரமாக பறக்கும் போதோ அவற்றை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும், குளிரான கேபின் என்பது ஏர் கண்டிஷனிங் அமைப்புகளில் குறைவான அழுத்தத்தையும் பயணிகளுக்கு ஆறுதலையும் தருகிறது.
வெள்ளை நிறமானது பார்வை திறனை மேம்படுத்துவதால் நீல வானம், பச்சை நிலப்பரப்புகள் அல்லது கடலுக்கு எதிராக விமானம் வரும்போது தெளிவாகத் தெரிவதற்கு உதவுகிறது.
இதனால் பறவைகள் மோதும் அபாயத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், அவசர காலங்களில் விமானத்தைக் கண்டறிவதையும் எளிதாக்குகிறது.
மேலும் இதன் பின்னால் இருக்கும் முக்கியமான காரணம் பண செலவு தான். வெள்ளை நிறத்தை தவிர மற்ற நிறங்களை பெயிண்ட் செய்வதால் சூரிய ஒளியில் அவை வேகமாக மங்குகின்றன.
இதனால் மீண்டும் பெயிண்ட் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு செலவை ஏற்படுத்தும். இதுவே வெள்ளை நிறத்தை பெயிண்ட் செய்வதால் பராமரிப்பு செலவு குறைகிறது.
அதோடு, பெயிண்டால் விமானத்தில் எடையும் அதிகரிக்கிறது. அதனை தவிர்ப்பதற்காவும் வெள்ளை நிறத்தை தேர்வு செய்கின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All