Search

janani

Jul 3, 2026

உள்ளூர்

2027ஆம் நிதியாண்டுக்கான பாதீடு தயாரிப்புப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

2027ஆம் நிதியாண்டுக்கான பாதீடு மதிப்பீடுகளைத் தயாரிக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பணிகள் 02/2026 இலக்க தேசிய பாதீட்டு சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, கட்டாய செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள செலவு எல்லைகளை அனைத்து அமைச்சுக்களும் அரச நிறுவனங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், புதிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகள் அனைத்தும் பூர்வாங்க பாதீட்டு மதிப்பீடுகளுக்குள்ளேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், பாதீட்டு மதிப்பீடுகள் மற்றும் அது சார்ந்த தரவுகளைச் சமர்ப்பிப்பதற்கு 'ஒருங்கிணைந்த திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமையை' (ITMIS) பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களும் தங்களது பாதீட்டு மதிப்பீடுகளை இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தேசிய பாதீட்டு திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என நிதி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All