
admin
Dec 28, 2025
உலகம்
கேரளாவில் பறவைக் காய்ச்சல் : தமிழ்நாட்டில் தீவிர கண்காணிப்பு .

இந்தியாவின் கேரளா மாநிலம், குறிப்பாக ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் கோழி, வாத்து போன்ற பறவைகள் பெரிதும் வளர்க்கப்பட்ட பண்ணைகளில் அடிக்கடி செத்து மடிந்ததால், மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
சோதனையில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்படி, கேரளாவில் பாதிப்பு உள்ள பகுதிகளில் கோழி, காடை இறைச்சி மற்றும் முட்டை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு, பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகள் மொத்தமாக அழிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டிலும் எல்லை மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. கேரளா–தமிழ்நாடு எல்லையோர வாகனங்கள் சோதனை செய்யப்படுவதுடன், கிருமிநாசினிகள் தெளித்து, கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து கண்காணிப்பு பணிகள் நடத்தப்படுகின்றன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






