
Rebecca
Mar 4, 2026
உலகம்
அயதுல்லா அலி கமேனியின் அரச இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரச இறுதிச் சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூன்று நாட்கள் நடைபெறவிருந்த இந்த இறுதிச் சடங்கு இன்றைய தினம் ஆரம்பமாகவிருந்தது.
எவ்வாறாயினும், நிகழ்வை நடத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்படும் வரை அது ஒத்திவைக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இறுதிச் சடங்கு நடைபெறும் புதிய திகதி இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





