
admin
Jul 22, 2026
உள்ளூர்
செயற்கை நுண்ணறிவு கிழக்கு மாகாணத்தில் அங்குரார்ப்பணம்.

கிழக்கு மாகாணத்தின் மாகாண அரச நிறுவனங்களில் பயன்படுத்துவதற்கும், அலுவலக நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்ட மென்பொருளை அறிமுகப்படுத்தும் தொடக்க விழா, இன்று (22) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, பிரதம செயலாளர் கே.குணநாதன் ஆகியோர்களது பங்கேற்புடன் இடம்பெற்றது.
குறித்த மென்பொருளின் மூலமாக வினைத்திறனான அரச சேவையை முன்னெடுப்பதற்கும் அலுவலக வேலைகளை இலகுபடுத்தவும் சிறந்த உத்தியாக இது காணப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் போது மாகாண பிரதம செயலாளர் கே.குணநாதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தற்போதைய நடப்பு அரசாங்கத்தின் புதிய உத்தியோகத்தர்களுக்கான கொள்கையாக டிஜிட்டல் மயமாக்கமம் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது இதனடிப்யபடையில் கிழக்கு மாகாணமும் இதில் இதன் மூலமாக முன்னேற்றமடைய வேண்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






