MuSHArraf
Aug 20, 2025
ஆரோக்கியம்
முடியிலிருந்து தயாரிக்கப்படும் பற்பசை
உங்கள் முடியிலிருந்து தயாரிக்கப்படும் டூத்பேஸ்ட் (பற்பசை) பாதிக்கப்பட்ட உங்களின் பற்களை சரிசெய்து பாதுகாக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
முடி, தோல் மற்றும் கம்பளியில் காணப்படும் புரதமான கெரடினால் பல் எனாமலை சரி செய்து பல் சொத்தையாவதை முன்கூட்டியே தடுக்க முடியும் என லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கெரடின் என்பது எச்சிலில் உள்ள தாதுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது இயற்கையான எனாமல் அமைப்பு மட்டும் செயல்பாட்டை ஒத்த பாதுகாப்பு பூச்சு ஒன்றை தயாரிக்கிறது என இவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
"கெரட்டின் என்பது தற்போதைய பல் சிகிச்சைகளுக்கு ஒரு நல்ல மாற்றை வழங்குகிறது" என்கிறார் கிங்ஸ் கல்லூரியின் முனைவர் ஆய்வாளரும் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான சாரா காமியா.

"இந்த தொழில்நுட்பம் உயிரியல் மற்றும் பல் மருத்துவத்துக்கு இடையேயான இடைவெளியை சுருக்கி இயற்கையான நடைமுறையை பிரதிபலிக்கும் சுழலுக்கு உகந்த மாற்றை வழங்குகிறது" என்று தெரிவித்தார்.
மேலும் அவர், "இது உயிரியல் கழிவு பொருட்களான முடி மற்றும் தோலிலிருந்து சூழலுக்கு உகந்த முறையில் நிலையாக பெறப்படுகிறது. அதோடு இவை பல் மறுசீரமைப்பில் பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை கொண்ட பாரம்பரிய பிளாஸ்டிக் ரெசின்களுக்கான தேவையை தவிர்க்கிறது." என்றார்.
அட்வான்ஸ்ட் ஹெல்த்கேட் மெட்டீரியல்ஸில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் விஞ்ஞானிகள் கம்பளியிலிருந்து கெரடினை எடுத்துள்ளனர்.

கெரடினை பற்களில் தேய்கின்றபோது எச்சிலில் உள்ள தாதுக்களில் தொடர்பு ஏற்படுவதன் மூலம் இயற்கை எனாமலின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை பிரதிபலிக்கிற மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, படிகம் வடிவிலான சாரம் போன்ற அமைப்பை உருவாக்குகிறது.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, காலப்போக்கில் இதன் மீது கால்சியம் மற்றும் பாஸ்பேட் ஐயன்கள் தொடர்ந்து படிந்து பற்களைச் சுற்றி எனாமல் பூச்சு போன்ற பாதுகாப்பு அமைப்பு உருவாவதற்கு வழிவகுக்கிறது.
அமிலத்தன்மை கொண்ட உணவுகள் மற்றும் பானங்கள், மோசமான வாய் சுகாதாரம் மற்றும் வயதாவது என அனைத்துமே எனாமல் அரித்து பற்சிதைவுக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் பல் வலி ஏற்பட்டு ஒருவர் பல்லை இழக்க நேரிடுகிறது.

"எலும்பு மற்றும் முடி போல எனாமல் மறு உற்பத்தி செய்துகொள்ளாது. ஒருமுறை இழந்தால் அதன் பிறகு மீண்டும் பெற முடியாது" என்கிறார் மூத்த ஆசிரியரும் கிங்ஸ் கல்லூரியில் ப்ராஸ்தோடாண்டிக்ஸ் துறையின் ஆலோசகருமான ஷெரிஃப் எல்ஷர்காவி
"நாம் ஒரு சுவாரஸ்யமான யுகத்தில் நுழைகிறோம். இங்கு உயிரி தொழில்நுட்பம் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாது உடலின் சொந்த பொருட்களை பயன்படுத்தி உயிரியல் செயல்பாடுகளை மீட்டெடுக்கிறது"
"மேலும் வளர்ச்சி மற்றும் சரியான துறைசார் கூட்டணி மூலம் கூடிய விரையில் நாம் முடிவெட்டுவது போன்ற எளிய விஷயத்திலிருந்து வலுவான, ஆரோக்கியமான புன்னகைகளைப் பார்க்க முடியும்" எனத் தெரிவித்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All