
Rebecca
Jan 13, 2026
உள்ளூர்
சபாநாயகர் கூறியதாகப் பரப்பப்படும் தவறான செய்தி குறித்த அறிவிப்பு

நாடாளுமன்ற வளாகத்திற்குள் போதைப்பொருள், மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்தும் ஊழியர்கள் குழுவினருக்கு எதிராக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன கடும் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளார் எனச் சில ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என இலங்கை நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த செய்தி எந்தவிதமான அடிப்படை ஆதாரமுமின்றி வெளியிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளதாக நாடாளுமன்றச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறான ஊழியர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றத்தின் எந்தவொரு அதிகாரிக்கும் ஆலோசனை வழங்கவில்லை என அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
உணவகப் பிரிவு உள்ளிட்ட சில ஊழியர்கள் இரகசியமான முறையில் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களைப் பயன்படுத்துவதாகக் கிடைத்த தகவலின் பேரில் சபாநாயகர் இந்த ஆலோசனைகளை வழங்கியதாகப் பரப்பப்படும் செய்தியும் பொய்யானது.
இவ்வாறான நிலைமைகள் வளர இடமளித்தமைக்காக நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரிகளை சபாநாயகர் கண்டித்ததாகக் கூறப்படும் தகவல்களிலும் எவ்வித உண்மையும் இல்லை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






