Search

admin

Feb 3, 2026

உள்ளூர்

பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கிய முச்சக்கர வண்டி

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 235 அடி பள்ளத்தில் விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் கூறுகையில், நுவரெலியா கந்தப்பளை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து சுமார் 235 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது எனத் தெரிவித்தனர் . 

மேலும் குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All