Search

janani

Apr 1, 2026

உலகம்

எண்ணெய் தளங்களை குறிவைத்த தொடர் தாக்குதல்!

ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட அடுத்தடுத்த தாக்குதல்களால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.


குர்திஸ்தான் பிராந்தியத்தின் தஹுக் மாகாணத்தில் அமைந்துள்ள சர்சாங் எண்ணெய் வயல் மீது ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்தி தெரிவிக்கின்றது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே நிலவும் போர்ச் சூழலின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல்கள் பார்க்கப்படுகின்றன. ஈராக்கிலுள்ள சில ஆயுதக் குழுக்கள் இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளதுடன், இது பிராந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் ஒரு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All