Search

admin

Jan 27, 2026

உள்ளூர்

கொகிலை பறிக்கச் சென்றவர் சேற்றுக்குழியில் விழுந்து பலி

மில்லனிய, கிம்மன்துதாவ பகுதியில் நபர் ஒருவர் கொகிலை குழிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக மில்லனிய பொலிஸார் தெரிவித்தனர். 

 உயிரிழந்தவர் சுமணஜோதி புர, கிம்மன்துடாவ, பண்டாரகம முகவரியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆரியபால என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

 இவர் தனது தம்பியின் வீட்டிற்கு அருகிலுள்ள தற்காலிக வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.

 கடந்த இரவு அவர் வீடு திரும்பாததையடுத்து, அவரது சகோதரர் நேற்று (26) மதியம் அப்பகுதியைச் சோதனையிட்டுள்ளார். 

 இதன்போது, வீட்டிற்கு அருகில் உள்ள கொகிலை பாத்திக்கு அருகில் பறிக்கப்பட்ட கொகிலை கட்டு ஒன்று காணப்பட்டுள்ளது. 

 அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், குறித்த குழிக்குள் இருந்து சகோதரரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மில்லனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All