Search

Rebecca

Jan 26, 2026

உள்ளூர்

கொழும்பில் 77ஆவது இந்திய குடியரசு தின விழா!

இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விழா இன்று (26) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Ja) தலைமையில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் (India house) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, இலங்கையின் அமைதி மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக உயிர்நீத்த இந்திய இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து, இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் இந்திய அமைதி காக்கும் படை (IPKF) நினைவுச் சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All