Search

admin

Jan 11, 2026

உள்ளூர்

விசேட சுற்றிவளைப்பில் 679 பேர் கைது

நேற்று நாடு முழுவதும் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கைகளின் போது 679 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் பொலிஸாரால் 30,322 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் போது பதிவான ஏனைய விபரங்கள்:

குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 14 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற பிடிவிறாந்து (Warrants) பிறப்பிக்கப்பட்டிருந்த 275 பேரும், திறந்த பிடிவிறாந்து (Open Warrants) பிறப்பிக்கப்பட்டிருந்த 150 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய 507 சாரதிகளும், அபாயகரமான முறையில் வாகனம் செலுத்திய 39 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 5,244 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All