Search

janani

Apr 1, 2026

உலகம்

ரஷ்ய இராணுவ விமானம் விபத்தில் 29 பேர் பலி !

கிரிமியா தீபகற்ப வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்யாவின் 'அன்டோனோவ்-26' (An-26) ரக இராணுவ போக்குவரத்து வானூர்தி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.


ரொய்டர்ஸ் ஊடகத்தில் வெளியாகிய செய்திகளின் படி, நேற்று மொஸ்கோ நேரப்படி மாலை 6 மணியளவில் கிரிமியன் தீபகற்பத்தின் வான்பரப்பில் திட்டமிடப்பட்ட பயணத்திலிருந்த குறித்த வானூர்தி, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.


இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் முடிவில், வானூர்தி விபத்துக்குள்ளான சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன.விபத்துக்குள்ளான வானூர்தியில் 6 விமானப் பணியாளர்கள் மற்றும் 23 பயணிகள் என மொத்தம் 29 பேர் பயணித்துள்ளனர்.


அவர்கள் அனைவரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All